| ADDED : மே 02, 2024 11:43 AM
குளித்தலை: குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆண்டு விழா நடந்தது. சங்க தலைவரும், அரசு வழக்கறிஞருமான சாகுல் அமீது தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர்கள் பாலன், கலைச்செல்வன், ராஜி, மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககனி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரகதீஸ்வரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன் ஆகியோர் சிறப்பாளர்களாக பங்கேற்று, நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் குறித்து பேசினர். வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நீதிபதிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.அரசு வழக்கறிஞர் நீலமேகம், மாஜி அரசு வழக்கறிஞர் மூர்த்தி, மனோகரன், வக்கீல் சங்க பொறுப்பாளர்கள் நாகராஜ், தமிழ்செல்வன், சரவணன், முருகேசன் மற்றும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பணியிடம் மாறுதலாகி செல்லும் சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககனி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.