உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தனியார் நிதி நிறுவனபங்குதாரர் மீது வழக்கு

தனியார் நிதி நிறுவனபங்குதாரர் மீது வழக்கு

குளித்தலை, சீட்டு பணம் தராததால், தனியார் நிதி நிறுவன பங்குதாரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் வெங்ககல்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு, 40. இவர், லாலாபேட்டையில் உள்ள ஆறு பெரியசாமி ஆதிசிவன் சிட்ஸ் பிரைவேட் நிதி நிறுவனத்தில், தனது மகன்கள் கணபதி, தேவசேனா பெயரில் ரூ.50 ஆயிரம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். 18வது சீட்டு தங்கராசுக்கு கிடைத்தது.சீட்டு பணம், 25 நாட்களுக்குள் தருவதாக, நிதி நிறுவனத்தின் பங்குதாரர் புனவாசிப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறினார். ஆனால், பல நாட்களாகியும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். ஆறு மாதங்களை கடந்தும் பணம் கொடுக்கவில்லை. பலமுறை நேரில் கேட்டபோது, போன் பே மூலம் பணம் அனுப்புவதாக கூறினார். பணம் அனுப்பவில்லை. அதேசமயம் சுரேஷ் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், தங்கராசு கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, நிதி நிறுவன பங்குதாரர் சுரே ைஷ தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை