ப.வேலுார்: ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை யில், வாரந்தோறும் செவ் வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடப்பது வழக்கம். இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்ட மங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 8,517 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். கடந்த வாரம், அதிகபட்சம் கிலோ, 24.19 ரூபாய், குறைந்தபட்சம், 20.19 ரூபாய், சராசரி, 23.79 ரூபாய் என, மொத்தம், 1.12 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 25.55 ரூபாய், குறைந்தபட்சம், 20.30 ரூபாய், சராசரி, 24.69 ரூபாய் என, 74,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.