கரூர்; கரூர் கலெக்டர் அலுவலகத்தில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் முத்துக்குமரன் கூறியதாவது:தற்போது, திடக்கழிவு மேலாண்மை விதி அம-லுக்கு வந்துள்ளது. இதனால், 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கட்டடம், நாள் ஒன்றுக்கு, 40,000 லிட்டருக்கு மேல் நீர் பயன்படுத்தல், நாள் ஒன்றுக்கு, 100 கிலோ அல்-லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவை உரு-வாக்கும் நிறுவனங்கள், குடியிருப்பு நல சங்-கங்கள், ஓட்டல்கள், விடுதிகள், மருத்துவம-னைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்-நுட்ப பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் ஆகி-யவற்றை பதிவு செய்ய வேண்டும்.மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், http://swm.cpcb.gov.in./register என்ற இணையதளம் மூலம், 15 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் பதிவை முடிக்க தவறும்பட்சத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அமைப்புகள், தங்களது சொந்த செலவில் தேவையான, நான்கு வண்ண குறியீடுகள் கொண்ட குப்பை தொட்டி-களை வாங்க வேண்டும். மேலும், கழிவுகளை அவை உருவாகும் இடத்தில் பிரிக்கப்பட்டு மாந-கராட்சி துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மொத்த கழிவு உருவாக்குபவர் அனைவரையும் ஒரு வாரத்-திற்குள் கண்டறிந்து, இணைய தளத்தில் பதி-வேற்றம் செய்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், கரூர் மாநகராட்சி கமிஷனர் பிரித்தி-விராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.