உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தான்தோன்றிமலையில் மாசி மக தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்பு

தான்தோன்றிமலையில் மாசி மக தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்பு

கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தேரோட்டம் நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம் தான் தோன்றிமலை, வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மக தெப்பத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22ல் திருக்கல்யாண உற்வசம் நடந்தது. நேற்று காலை, 9:15 மணிக்கு தேரோட்ட விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.நாளை மாலை, 6:00 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம், வரும், 27, 29 ல் வெள்ளி கருடசேவை, வரும் மார்ச், 2 ல் ஆளும் பல்லாக்கு, 3ல் ஊஞ்சல் உற்சவம், 4 ல் புஷ்பயாகம் ஆகிய நிகழச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ