உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தற்கொலைக்கு முயன்ற இன்ஜினியர் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தற்கொலைக்கு முயன்ற இன்ஜினியர் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கரூர்,: கரூர் அருகே, வீட்டை தாழிட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்ற, இன்ஜினியரை தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டனர்.தேனி மாவட்டம், பெரிய குளம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் ரஞ்சித் குமார், 30; இஞ்ஜினியர். இவர், கரூர் அருகே காந்தி கிராமம் தமிழ் நகரில் உள்ள, சகோதரர் மனோகரன் வீட்டுக்கு, நேற்று முன்தினம் வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டை உள் புறமாக தாழிட்டு கொண்டு, கம்பியால் குத்தி தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என, சத்தம் போட்டார். தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு வீரர்கள் சென்று, ரஞ்சித் குமாரிடம் பேச்சு கொடுத்தபடியே, கதவை உடைத்தனர். பிறகு, ரஞ்சித் குமாரை உயிருடன் மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்கொலைக்கு முயன்ற ரஞ்சித் குமார், ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை