உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

கரூர்:லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச், 27. மார்ச் 28 வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. மார்ச் 30ல் வேட்பு மனுவை திரும்ப பெறலாம். ஏப்., 19 ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதன்படி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிறது.வேட்புமனுவை தாக்கல் செய்ய வரும் போது, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து, 100 மீட்டருக்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்காக சாலையில் பேரி கார்டு வைத்து, தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது வேட்பாளர்கள், தங்களுடன் நான்கு நபர்களை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும்.மேலும், ஒரு வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கலுக்கான கட்டணம், 25,000 ரூபாய். தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த வேட்பாளர்களுக்கு வேட்புமனு தாக்கலுக்கான கட்டணம், 12,500 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி