கரூர்: டெல்லியில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், அ.தி.மு.க., கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் மனு அளித்தார். மத்திய இணை அமைச்சர் முருகன், அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை ஆகியோர் உடனிருந்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை, கரூர், சேலம் வழியாக சென்னைக்கு அல்லது கோவை, கரூர், திருச்சி வழியாக சென்னைக்கு புதியதாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். வந்தே பாரத் ரயில் எண் 20671 மதுரையிலிருந்து பெங்களூரு, மறுமார்க்கமாக ரயில் எண் - 20672 பெங்களூருவிலிருந்து மதுரைக்கு திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம் வழியாக பெங்களூரு சென்று வருகிறது. இதனை, மறுமார்க்கமாக பெங்களூரு, சேலம், நாமக்கல் வழியாக கரூர், திண்டுக்கல் மதுரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரயில் எண் 22153 சென்னையில் இருந்து சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை, கரூர் வரை நீட்-டிப்பு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு, 6 ஆண்-டுகள் கடந்த நிலையிலும் அமல்படுத்தப்பட-வில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்ப-டுத்த வேண்டும். ரயில் எண்- 20601, மறுமார்க்கம் ரயில் எண்- 20602 சென்னை சென்ட்ரலில் இருந்து போடிநாயக்கனுார் எக்ஸ்பிரஸ், கரூர் வழியாக வாரம் மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை தினசரி வண்டியாக இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.