உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிதி நிறுவன ஊழியருக்கு அடி; சக ஊழியர் மீது போலீசார் வழக்கு

நிதி நிறுவன ஊழியருக்கு அடி; சக ஊழியர் மீது போலீசார் வழக்கு

கரூர்: கரூரில், நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக, சக ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் கருப்ப கவுண்டன்புதுார் பகுதியை சேர்ந்தவர் மணி சங்கர், 33; நிதி நிறுவன ஊழியர். இவருக்கும், அதே நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் தான்தோன்றிமலை திருநகரை சேர்ந்த தினேஷ் குமார், 38, என்பவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மணி சங்கர், கரூர் உழவர் சந்தை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற தினேஷ் குமார் தகாத வார்த்தை பேசி, மணி சங்-கரை அடித்துள்ளார். இதுகுறித்து, மணி சங்கர் கொடுத்த புகார்-படி, கரூர் டவுன் போலீசார், தினேஷ் குமார் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை