உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி

கரூர் : கரூர் மாவட்டம், காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார், 50; அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன் தினம், யமஹா பைக்கில், கரூர்-கோவை சாலை முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், செந்தில் குமார் மீது மோதியது. தலையில் படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். செந்தில் குமாரின் மனைவி வனிதா, 37; கொடுத்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை