உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூலிமங்கலத்தில் உதவி மையம்

மூலிமங்கலத்தில் உதவி மையம்

கரூர், புகழூர் செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில், மூலிமங்கலத்தில் இலவச சமுதாய மருத்துவ உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.காகித நிறுவனத்தின் செயல் இயக்குனர் யோகேந்திர குமார் வர்சனே திறந்து வைத்தார். சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் பொது மருத்துவ முகாம், கண்சிகிச்சை முகாம், புற்றுநோய் கண்டறியும் முகாம் ஆகியவற்றை நடத்தி வருகிறது. காகித ஆலையை சுற்றியுள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., வேட்டமங்கலம், புன்னம், கோம்புப்பாளையம், நஞ்சைப்புகழூர், திருக்காடுதுறை ஆகிய இடங்களில் தினசரி நடமாடும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இதன்படி, மூலிமங்கலத்தில் உள்ள மருத்துவ உதவி மையம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.நிகழ்ச்சியில், முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) ராஜலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்