உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தி.மு.க., சார்பில் கபடி போட்டி

தி.மு.க., சார்பில் கபடி போட்டி

கரூர், கரூரில், தி.மு.க., சார்பில் நடந்த கபடி போட்டியில், 50 அணிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கரூர், திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், மாவட்ட தி.மு.க., சார்பில் ஆண்களுக்கான கபடி போட்டி துவக்க நிகழ்ச்சி, நேற்று நடந்தது. தி.மு.க., மாநகர செயலர் கனகராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட அளவிலான போட்டியில், 50 அணிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியில், இன்று பரிசளிப்பு விழா நடக்கிறது. இப்போட்டியில் மொத்தம், 2.15 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது. கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பரிசு வழங்குகிறார். மேலும், அர்ஜூனா விருது பெற்ற முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசன் கலந்துகொள்கிறார். கரூர் மாநகர பகுதி பொறுப்பாளர் ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை