உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அண்ணன் கொலை தம்பி தலைமறைவு

அண்ணன் கொலை தம்பி தலைமறைவு

குளித்தலை: தோகைமலை அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொன்ற தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர். குளித்தலை ஆச்சம்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் தங்கையன் (35) வெல்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும், அவரது தம்பி சேகர் (32) என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக சொத்து தொடர்பாக தகராறு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தங்கையனுக்கும், சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சேகர், தங்ககையனை தடியால் தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயம் அடை ந்த தங்கையன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். தலைமறைவாக உள்ள சேகரை போலீஸார் தேடி வருகின்றனர். தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ