உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பல்கலைக்கழக அளவிலான தேர்வு பதக்கம் வென்றவருக்கு பாராட்டு

பல்கலைக்கழக அளவிலான தேர்வு பதக்கம் வென்றவருக்கு பாராட்டு

குளித்தலை : குளித்தலை, அரசு கலைக்கல்லுாரி மாணவன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக் கழக அளவிளான தேர்வில், தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.அரசு கலைக்கல்லுாரி மின்னணுவியல் துறையை சேர்ந்த மாணவர் கதிரேசன், 2023 ஏப்.,ல், நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வில், முதுநிலை மின்னணுவியல் பாடப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். இதையடுத்து கல்லுாரியின், 13வது பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலா, மாணவரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.முதல்வர் ரவிச்சந்திரன், மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் வேணுகோபால் மற்றும் மின்னணுவியல் பேராசிரியர்கள் மகேந்திரன், வீரமுரளி, பிச்சமுத்து, உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் பலர் மாணவரை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி