குளித்தலை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 334 மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், 318 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 95 சதவீதம். இப்பள்ளி மாணவி பிரியா, 560 மதிப்பெண், பரணி பிரியா, 554, பிரியதர்ஷினி, 551 மதிப்பெண்கள் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை, பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதேபோல், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 125 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 107 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 86. மாணவர் கிஷோர், 505, சந்தானம், 500, பாலமுருகன், 493 மதிப்பெண்கள் பெற்றனர்.கூடலுார் பஞ்., பேரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 66 பேர் தேர்வெழுதினர். அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை போலவே தற்போதும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இனங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 52 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 50 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 96 சதவீதம். நெய்தலுார் காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில், 72 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 70 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 97. ஆ.டி. மலை அரசு மேல்நிலைப் பள்ளியில், 260 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி, 245 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 94.23 சதவீதமாகும். மாணவி கீர்த்தனா, 559, அம்சவள்ளி, 545, பிருந்தா, 536 மதிப்பெண்கள் பெற்றனர்.ஆலத்துார், அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய, 31 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு போல் இந்தாண்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி மோகனா, 515, தீபா, 511, அசின், 510 மதிப்பெண்கள் பெற்றனர்.அய்யர்மலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய, 111 பேரில், 106 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது, 95 சதவீதமாகும். மாணவி பார்கவி, 567 மதிப்பெண், சந்தியா, 537, செண்பக பிரியா, 535 மதிப்பெண் பெற்றனர்.தோகைமலை, அரசு மேல்நிலைப் பள்ளியில் 236 பேர் தேர்வு எழுதினர். 222 நபர் தேர்ச்சி பெற்றனர். மாணவி லாவண்யா, 546 மதிப்பெண், பத்மாவதி, 535, ரங்கநாதன், 535, நாகேஸ்வரி 532 மதிப்பெண் பெற்றனர்.