உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெற்றி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

வெற்றி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த நாகனுார் பஞ்., கிருஷ்ணம்-பட்டியில், வெற்றி விநாயகர் கோவிலில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டடன. அதை தொடர்ந்து கும்-பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த, 6ல் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின், புனிதநீர் அடங்கிய கும்பத்தை யாக வேள்வி சாலையில் வைத்து, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, நவகிர-கங்கள் யாகம், பூர்ணாஹூதி திரவ்யாஹூதி உள்ளிட்ட, இரண்டு கால யாக வேள்வி பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, புனிதநீர் கும்-பத்தை, மங்கல வாத்தியம் முழங்க சிவாச்சாரி-யார்கள் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்-றனர். பின், புனிதநீரை கலசம் மீது ஊற்றி கும்பா-பிஷே கம் செய்தனர். அதை தொடர்ந்து, பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்-கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்-துகொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்-பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி