உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்ட தி.மு.க., சார்பில் மாரத்தான், சைக்கிள் போட்டி

மாவட்ட தி.மு.க., சார்பில் மாரத்தான், சைக்கிள் போட்டி

கரூர்: கரூர் மாவட்ட, தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கரூர், திருவள்ளுவர் மைதானத்தில், ஆண்கள், பெண்கள் மாரத்தான் போட்டி நடந்தது. கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலஜி, போட்டியை தொடங்கி வைத்தார். ஆண்களுக்-கான மாரத்தான் போட்டி, 10 கி.மீ., துாரமும்; பெண்களுக்கு, 7 கி.மீ., துாரம் நடந்தது.அந்த மைதானத்திலிருந்து, மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது. கரூர் ஜவஹர் பஜார், பழைய பஸ்டாண்ட் ரவுண்டானா, சுக்காளியூர் ரவுண்டானா வழியாக, 10 கி.மீ., துாரம் சென்று மீண்டும் திருவள்ளூர் மைதானத்தில் வந்தடைந்-தனர். மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசு, 50,000 ரூபாய்; இரண்டாம் பரிசு, 40,000 ரூபாய்; மூன்றாம் பரிசு, 30,000 ரூபாய் வழஙகினர்.சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரருக்கு முதல் பரிசாக, 25,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 15,000 ரூபாய் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை