உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொசு ஒழிப்பு பணி மும்முரம்

கொசு ஒழிப்பு பணி மும்முரம்

அரவக்குறிச்சி :மழை தொடங்கி விட்டதால், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டெங்கு பரவும் நிலை உள்ளது. இந்நிலை ஏற்படாமலிருக்க, அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பில், டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது. பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் சார்பில், கொசு ஒழிப்பு வாகனத்தின் மூலம், மாலதின் கொசு ஒழிப்பு மருந்து புகை தெருக்களில் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. கைக்கருவிகள் மூலம் வீடுகளிலும் கொசு ஒழிப்பு புகை அடிக்கப்படுகிறது. டெங்கு ஒழிப்பு பணியில், சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை