உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்

ரயில்வே பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்

கரூர்: கரூர் அருகே ரயில்வே பாலத்தில், மின் விளக்-குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-சேலம் இடையே, புதிதாக ரயில்வே பாதை அமைக்கப்பட்டு, கடந்த, 2013 முதல் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்-றன. வாங்கல்-மண்மங்கலம் இடையே, ரயில்வே பாதை அமைக்கும்போது, மாரி கவுண்டன்பாளை-யத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், ரயில்வே பாலம் கட்டப்பட்டது. ஆனால், அப்-போது மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இந்நிலையில், வாங்கல்-மோகனுார் இடையே காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்-டப்பட்ட பின், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் பகுதிகளுக்கு அதிகளவில் வாகனங்கள், மாரி கவுண்டன்பா-ளையம் ரயில்வே பாலம் வழியாக சென்று வரு-கிறது. தற்போது, ரயில்வே பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் இரவு நேரங்களில், பாலங்களில் வழிப்பறியும் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.எனவே, மண்மங்கலம்-வாங்கல் இடையே மாரி-கவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தில், உடனடியாக மின் விளக்-குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி