உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாம்பலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பாம்பலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை;குளித்தலை அடுத்த சேப்ளாப்பட்டியில், பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த, கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் முடிவு செய்தனர். முன்னதாக கடந்த, 19ல் பெருகமணி காவிரியாற்றில் இருந்து, பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்தனர். புனிதநீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் யாகவேள்வி சாலையில் வைத்து, மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து, சாந்தி பூஜை, வேதபாராயணம், நாடி சந்தனம், லட்ச்சார்ச்சனை திரவியாஹூதி, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்ட, 4 கால யாக வேள்வி பூஜை செய்தனர்.நேற்று காலை, 4ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், 9:30 மணிக்கு புனிதநீர் கும்பத்தை, சிவாச்சாரியார்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர்.விழாவில், சேப்ளாப்பட்டி பஞ்., தலைவர் விமலா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி சந்திரன் உள்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி