உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திறந்து கிடக்கும் வடிகால் விபத்தில் சிக்கும் மக்கள்

திறந்து கிடக்கும் வடிகால் விபத்தில் சிக்கும் மக்கள்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் செல்லும் சாலையோரம் சிமென்ட் சிலாப் போட்டு மூடாததால், மக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையில் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக சாலையோரம் வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வடிகால் மேற்புறம் சிலாப் போட்டு மூடாமல் கிடப்பில் உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக தாலுகா அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகள் திறந்த நிலையில் உள்ள வடிகாலில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, திறந்த நிலையில் உள்ள வடிகாலில் சிமென்ட் சிலாப் போட்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்