உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை

த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை

கரூர்: த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியிடம் மனுக்களை வழங்கிய, பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிக-ளிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.கரூர், வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் நடந்த, த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன் குமார் தலையைில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ijwdsv5b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விசாரணையை கண்-காணிக்கும் வகையில், உச்சநீதிமன்ற ஓய்வு-பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டி.ஜி.பி.,க்கள் சுமித்சரண், சோனல் மிஸ்ரா ஆகி-யோரையும் உச்சநீதிமன்றம் நியமித்தது.இவர்கள், மூன்று பேரும், கடந்த, 2ல் சி.பி.ஐ., அலுவலகம் அமைந்துள்ள, கரூர் கலெக்டர் அலு-வலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில், த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்-பாக, பல்வேறு தரப்பினரிடம் மனுக்களை பெற்-றனர்.அப்போது, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை(தனியரசு) கரூர் மாவட்ட செயலாளர் அருள் குமார், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பாரதி, புதிய திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர், த.வெ.க., தலைவர் விஜய் தாமதமாக வந்ததால், பிரசார கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது எனக்கூறி, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை-யிலான, கண்காணிப்பு குழுவினரிடம் மனுக்-களை வழங்கினர். இதையடுத்து, நேற்று காலை, 11:00 மணிக்கு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர் அருள்குமார், ஆதி-தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பாரதி, புதிய திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார் ஆகியோர், சி.பி.ஐ., அலுவல-கத்துக்கு வந்தனர்.அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள், த.வெ.க., பிர-சார கூட்டம் நடந்த நேரம், அக்கட்சி தலைவர் விஜய் பேசிய நேரம், பிரசார கூட்டம் எப்போது நிறைவு பெற்றது உள்ளிட்ட பல்வேறு கேள்வி-களை கேட்டு, பதில்களை பதிவு செய்து கொண்-டனர். பின், மூன்று பேரும் மதியம், 1:00 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை