| ADDED : ஜன 14, 2024 12:02 PM
கரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, விடுமுறை விடப் பட்டுள்ளதால், மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், கரூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கரூர் பஸ் ஸ்டாண்டில் ஊருக்கு செல்ல குவிந்தனர்.பொங்கல் பண்டிகை, இன்று போகியுடன் தொடங்குகிறது. நேற்று முதல் வரும், 17 வரை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், நேற்று கரூர் மாவட்டத்தில் விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல கரூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர்.கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பாதுகாப்பான பயணம் செய்யுமாறு, ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., செல்வராசு பயணிகளுக்கு, நேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், பயணிகளின் உடமைகளும் பரிசோதனை செய்யப்பட்டது.கரூரில் சாயப்பட்டறை, கொசுவலை நிறுவனம் மற்றும் பஸ் பாடி நிறுவனங்களில் தென் மாவட்டங்களை சேர்ந்த, தொழிலா ளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களும் நேற்று காலை முதல் பஸ், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.