உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரூ. 8.33 லட்சத்தில் நலத்திட்ட உதவி

பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரூ. 8.33 லட்சத்தில் நலத்திட்ட உதவி

கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாறுதல், திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 388 மனுக்கள் வரப்பெற்றன.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 பயனாளிகளுக்கு 7.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நவீன செயற்கை கால்கள், 4 பயனாளிகளுக்கு, 13,140 மதிப்பில் காதொலி கருவி மற்றும் 1 பயனாளிக்கு, 1.15 லட்சம் மதிப்பில் பேட்டரி வீல் சேர் என மொத்தம், 11 பயனாளிகளுக்கு, 8.33 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், கலெக்டர் நேர்முக உதவியாளர் யுரேகா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி