உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஏர் ஹாரன் பயன்பாட்டால் பொதுமக்கள் காது கொய்...

ஏர் ஹாரன் பயன்பாட்டால் பொதுமக்கள் காது கொய்...

குளித்தலை, குளித்தலை பகுதியில் அரசு, தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும், 'ஏர் ஹாரன்'கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யக்கோரி, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தினந்தோறும் மாநகர பஸ்கள், மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து அரசு, தனியார் என, 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. அதுமட்டுமின்றி கனரக வாகனங்கள், டூரிஸ்ட் பஸ்கள், ஆட்டோக்கள் இந்த சாலையை பெரும்பாலும் பயன்படுத்துகின்றன..இந்நிலையில், இப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் அதிக ஒலி எழுப்பும், 'ஏர் ஹாரன்'கள் பயன்படுத்துகின்றன. இதனால், வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிப்பதாக புகார் எழுகிறது. மேலும், டூவீலரில் செல்லும்போது அவர்களின் பின்னால் மிகவும் அருகே வந்து அதிக ஒலி எழுப்பி ஹாரன் அடிப்பதால், திடீரென ஏற்படும் சத்தத்தில் அச்சமடைந்து தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வாகன சோதனை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை