உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்பு

குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்பு

குளித்தலை: குளித்தலை, கடை வீதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக, 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் பாதுகாப்பு இல்லாமலும், அரைகுறை ஆடைகளுடனும் சுற்றி வந்தார். அவரை சாந்திவனத்தில் அனுமதித்து மனநல சிகிச்சையளித்து உதவிட வேண்டுமென சமுக ஆர்வலர் பாரதி, சாந்திவனம் மனநல காப்பகத்தின் இயக்குனர் அரசப்பனை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார். குளித்தலை போலீசாரின் உரிய அனுமதியுடன், நேற்று மதியம் சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் மருதாம்பாள் மற்றும் கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட மீட்புக் குழுவினர், மனநலம் பாதித்த நபரை மீட்டு, திருச்சி, தில்லை நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இங்கு சிகிச்சை முடிந்ததும், அவர் தொடர் மனநல சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளுக்காக சாந்திவனம் - மனநலம் காப்பகத்திற்கு மாற்றப்படுவார். அங்கு குணம் பெற்றவுடன், முகவரி கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை