உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தென்கரை பாசன வாய்க்காலில் சாலை அமைக்க கோரிக்கை

தென்கரை பாசன வாய்க்காலில் சாலை அமைக்க கோரிக்கை

குளித்தலை: குளித்தலை, தென்கரை பாசன வாய்க்கால் மாயனுார் காவிரி ஆற்றின் கதவணையில் இருந்து சித்தலவாய், மகாதானபுரம், லாலாபேட்டை, குளித்தலை, மருதுார் வழியாக, பெட்டவாய்த்தலை காவிரி ஆறு மற்றும் உய்யக்கொண்டான் வடிகாலில் இணைகிறது. இந்த தென்கரை பாசன வாய்க்கால் தென்கரையில், பெரியபாலத்தில் இருந்து மலையப்பன் நகர், தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதுார், குமாரமங்கலம் செல்லும் தென்கரையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இந்த தென்கரை பாசன வாய்க்கால் வடகரையில், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையும் உள்ளது. குளித்தலையில் இருந்து பெட்டவாய்த்தலை வரையுள்ள கிராமங்கள் தென்கரையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் குளித்தலைக்கு வந்து செல்லும் போது, நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில், தென் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொது பணித்துறையினர் அகற்றினர். இப்பகுதியில் சாலை வசதியை செய்து தர வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை