உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்நடைகளின் பாதுகாப்புக்கு விடுதி அமைக்க வேண்டுகோள்

கால்நடைகளின் பாதுகாப்புக்கு விடுதி அமைக்க வேண்டுகோள்

குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் கிராமத்தில், 2,000 குடியிருப்புகளுக்கு மேல் உள்ளன. முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். போதிய இட வசதி இல்லாததால் கால்நடைகளை சாலை மற்றும் பொது இடம், கோவில் மைதானங்களில் கட்டி பராமரித்து வருகின்றனர்.கால்நடைகளால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. சாலையில் கால்நடை கழிவுகள் ஆங்காங்கே கிடக்கின்றன. கால்நடைகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விவசாயத்திற்கு இயற்கை உரங்கள் ஒரே இடத்தில் தயாரிக்கவும், கால்நடைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, கால்நடைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் கட்டுவதற்கு, விடுதி வசதியை அமைத்து தர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை