உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறு பாலத்தில் சேதத்தால் விபத்து அபாயம்; வாகன ஓட்டிகள் அவதி

சிறு பாலத்தில் சேதத்தால் விபத்து அபாயம்; வாகன ஓட்டிகள் அவதி

கரூர் : கரூரில் சாலையின் குறுக்கே, சிறுபாலம் கட் டிய இடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர்.கரூர் ஜவஹர் பஜாரில் இருந்து, எம்.எல்.ஏ., அலுவலகம் செல்லும் சாலையின் குறுக்கே, முத்து ராஜபுரத்தில் சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. அதில் சேதம் ஏற்பட்டு, சிறுபாலம் குண்டும், குழியுமாக உள்ளது. இணைப்பு சாலையில் போடப்பட்ட, தரமற்ற சிமென்ட் ஜல்லிக்கற்கள், சிதறி கிடக்கின்றன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. அப்போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக, பொதுமக்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கரூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் செல்லும் சாலையில், முத்து ராஜபுரத்தில் உள்ள, சிறுபாலத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை