உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் சாலையில் செல்வோர் பீதி

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் சாலையில் செல்வோர் பீதி

அரவக்குறிச்சி: சாலையில் தாறுமாறாக சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால், எதிரே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் பீதியடைகின்றனர்.அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியில், சாலை விதிக-ளுக்கு புறம்பாக வயது குறைந்த சிறுவர்கள் இரு சக்கர வாகனங்-களை ஓட்டி செல்கின்றனர். அதுவும் தாறுமாறாக வேகமாக ஓட்டி செல்வதால், மற்ற வாகன ஓட்டிகள் பயத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் சிறுவர்கள் போட்டி போட்டு வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.இதில் சிறுவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். சிறு-வர்களில் பலர் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் செல்கின்றனர்.சிறுவர்கள் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால், அந்த வழக்கு பெற்றோர் மீது தொடுக்கப்பட்டு, 5,000 ரூபாய் அப-ராதம் விதிக்கப்படும். இந்த சட்டம் நடைமுறையில் இருந்தும் பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்கு உரிய வயதுக்கு பிறகே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும். சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை