| ADDED : ஜூன் 28, 2024 01:55 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இன்று (28ம் தேதி) இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.இது குறித்து முதல்வர் முனைவர் வசந்தி பத்மநாபன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணினி அறிவியல் மற்றும் பி.எஸ்சி., கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இன்று நடைபெறுகிறது.மாணவ, மாணவிகள் தங்களது அசல், மாற்றுச் சான்றிதழ், அசல் சாதிச்சான்றிதழ், அசல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ். அசல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அசல் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஐந்து. வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் இணையவழியில் பதிவிட்ட விண்ணப்பத்தின் அச்சு நகல் ஆகியவற்றுடன் கலந்தாய்வுக்கு வர வேண்டும்.மேலும் அனைத்து சான்றிதழ்களின், இரண்டு நகல்களையும் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வில் சேர்க்கை பெற்ற மாணவ மாணவிகள் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் நாளான இன்று காலை, 9:30 மணிக்கு கட்டாயமாக பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.