உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓட்டுச்சாவடி மையத்தில் சேவை மையம்:கலெக்டர்

ஓட்டுச்சாவடி மையத்தில் சேவை மையம்:கலெக்டர்

கரூர், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் உள்ள, 4 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால், கணக்கெடுப்பு படிவம் கடந்த, 4 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு பூர்த்தி செய்து, மீளப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதை, எளிமைப்படுத்தும் வகையில் நாளை, நாளை மறுநாள் (22, 23ம் தேதி) ஆகிய இரண்டு தினங்களில் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இங்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, 2002 மற்றும் 2005ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் ஆகியவற்றுடன் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்திட உதவி செய்வர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை