உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணிக்கம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு; காலி குடங்களுடன் மக்கள் மறியல்

பணிக்கம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு; காலி குடங்களுடன் மக்கள் மறியல்

குளித்தலை : பணிக்கம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடால், பஞ்., நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை அடுத்த இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்டி கிழக்கு பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் சரிவர வழங்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிராம பொதுமக்கள் பலமுறை பஞ்., தலைவர், யூனியன் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட கிராம மக்கள், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் அய்யர்மலை - குமாரமங்கலம் நெடுஞ்சாலை, பணிக்கம்பட்டி சந்தை நான்கு ரோட்டில் காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.குளித்தலை எஸ்.ஐ., பிரபாகரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 'ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுங்கள், பஞ்., தலைவர், யூனியன் கமிஷனரிடம் பேசி, தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன்' என உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை