| ADDED : ஜூலை 27, 2024 12:56 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த. பொய்யாமணி பஞ்., அக்ராஹாரம் ஆலமரத்-தடியில் சிறப்பு கிராம சபை கூட்டம் பஞ்., தலைவர் பாலன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பஞ்., செயலாளர் லெனின், 2020-21ம் ஆண்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது. திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் துாய்மை-யாக விளங்கும் கிராமமாக அறிவிப்பு செய்யப்பட்டது என, கூட்-டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என, வாசித்தார். வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள், யூனியன் அலுவலர் கலந்து கொண்டனர்.இதேபோல், இனுங்கூர் பஞ்., காகம்பட்டி புற்றுக்கோவில் அருகில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கு தலைவர் பாலு தலைமை வகித்தார். நல்லுார் பஞ்., அலுவலகம் எதிரில் நடை-பெற்ற கூட்டத்திற்கு பஞ்., தலைவர் கலா தலைமை வகித்தார். இதில் பஞ்., செயலாளர் நாகராஜன், யூனியன் பணி மேற்-பார்வையாளர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள், கலந்து கொண்டனர்.