உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் சிறப்பு திருத்த பணி; 4 தொகுதிகளில் 82,799 வாக்காளர்கள் நீக்கம்

கரூர் மாவட்டத்தில் சிறப்பு திருத்த பணி; 4 தொகுதிகளில் 82,799 வாக்காளர்கள் நீக்கம்

கரூர்: மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணியில், நான்கு தொகுதிகளில், 82,799 வாக்கா-ளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில், நான்கு சட்டசபை தொகு-திகளில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு வழங்கிய, கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்படுகிறது. நாளைக்குள் (11ம் தேதி) சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் மட்டுமே, வரைவு பட்டியலில் இடம் பெறும்.அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி: மொத்தம், 2 லட்சத்து, 12 ஆயிரத்து, 72 வாக்காளர்கள் உள்-ளனர். அதில், 1 லட்சத்து, 87 ஆயிரத்து, 957 (88.63 சதவீதம்) கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறப்-பட்டு, செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்-ளது. அதில் இறப்பு, 6,145 (2.90 சதவீதம்), கண்டறிய இயலாதவர்கள், 6,597 (3.11 சதவீதம்), நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், 10,726 (5.06 சதவீதம்), இரட்டை பதிவு 457 (0.22 சதவீதம்), மற்றவை 190 (0.09 சதவீதம்) என மொத்தம், 24,115 (11.37 சத-வீதம்) வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கரூர் சட்டசபை தொகுதி: மொத்தம், 2 லட்சத்து, 40 ஆயிரத்து, 848 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 2 லட்சத்து, 16 ஆயிரத்து, 266 (89.79 சதவீதம்) கணக்கீட்டு படிவங்கள் திருப்ப பெறப்பட்டு, செய-லியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் இறப்பு 4,321 (1.79 சதவீதம்), கண்டறிய இயலாத-வர்கள், 3,646, (1.51 சதவீதம்), நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், 16,170 (6.71 சதவீதம்), இரட்டை பதிவு, 378 (0.16 சதவீதம்), மற்றவை 67 (0.03 சத-வீதம்) என மொத்தம், 24,582 (10.21 சதவீதம்) வாக்-காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி: மொத்தம், 2 லட்சத்து, 13 ஆயிரத்து, 983 வாக்கா-ளர்கள் உள்ளனர். அதில், 1 லட்சத்து, 96 ஆயிரத்து, 600 (91.88 சதவீதம்) கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, செயலியில் பதிவேற்றம் செய்யப்-பட்டுள்ளது. அதில் இறப்பு 6,542 (3.06 சதவீதம்), கண்டறிய இயலாதவர்கள், 159 (0.07 சதவீதம்), நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், 10,062 (4.70 சத-வீதம்), இரட்டை பதிவு, 605 (0.28 சதவீதம்), மற்-றவை 15 (0.01 சதவீதம்) என மொத்தம், 17,383 (8.12 சதவீதம்) வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்-ளனர்.குளித்தலை சட்டசபை தொகுதி: மொத்தம், 2 லட்சத்து, 31ஆயிரத்து, 459 வாக்காளர்கள் உள்-ளனர். அதில், 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 740 (92.78 சதவீதம்) கணக்கீட்டு படிவம் திரும்ப பெறப்பட்டு, செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் இறப்பு, 6,894 (2.98 சதவீதம்), கண்டறிய இய-லாதவர்கள் 1,602 (0.69 சதவீதம்), நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், 7,285 (3.15 சதவீதம்), இரட்டை பதிவு, 802 (0.35 சதவீதம்), மற்றவை 136 (0.06 சதவீதம்) என மொத்தம், 16,719 (7.22 சதவீதம்) வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில், 8 லட்சத்து, 98 ஆயிரத்து, 362 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 8 லட்சத்து, 15 ஆயிரத்து, 563 (90.78 சதவீதம்) கணக்கீட்டு படிவம் திரும்ப பெறப்பட்டு, செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் இறப்பு, 23,902 (2.66 சதவீதம்), கண்டறிய இயலாதவர்கள் 12,004 (1.34 சதவீதம்), நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், 44,243 (4.92 சதவீதம்), இரட்டை பதிவு, 2,242 (0.25 சதவீதம்), மற்றவை, 408 (0.05 சதவீதம்) என மொத்தம் 82,799 (9.22 சதவீதம்) வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பிப்., 14ல் இறுதி வாக்காளர் பட்டியல்இது குறித்த விபரங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக, ஓட்டுச்சாவடி முகவர்க-ளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏதும் ஆட்-சேபணை இருப்பின், ஓட்டுச்சாவடி நிலை அலு-வலர்களிடம் தெரிவிக்கலாம். வரும், 16ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்-ளது. இந்த பட்டியலில் வாக்காளரின் பெயர் இல்-லையெனில், படிவம் 6- மற்றும் உறுதிமொழி படி-வத்தை இணைத்து, அவரது பெயரை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வரும் டிச., 16 முதல் ஜன., 15 வரை விண்ணப்பிக்கலாம்.இதன்படி விண்ணப்பித்த வாக்காளர்களின் பெயர் சேர்க்க, நீக்க அல்லது வாக்காளர் பட்டி-யலில் உள்ள பதிவுக்கு அந்தந்த தொகுதி வாக்-காளர் எதிர்ப்பு தெரிவிக்கலாம். தொடர்ந்து, டிச., 16 முதல் பிப்., 7 வரை அறிவிப்பு கூட்டம் நடக்கும். அதில், வாக்காளரின் தகுதி ஆய்வு செய்யப்படும். இது குறித்து, வாக்காளர் பதிவு அலுவலரால் விசாரணை நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.,14ல் வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ