| ADDED : டிச 28, 2025 08:21 AM
கரூர்: புகழூர், காந்தியார் துவக்கப்பள்ளியில், வாக்-காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாமை, டி.ஆர்.ஓ.,. விமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அவர் கூறியதாவது: மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முக-வரி மாற்றம் மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகிய-வற்றிற்காக சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் விண்ணப்ப படிவங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்-படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட அலுவ-லர்கள் மூலமாக பரிசீலனை செய்யப்பட்டு, 2026 பிப்., 17ல், இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்து வெளியிடப்படும்.இவ்வாறு, கூறினார். ஆய்வின் போது புகழூர் தாசில்தார் பிரபா உள்பட பலர் பங்கேற்றனர்.