| ADDED : டிச 10, 2025 11:15 AM
கரூர்: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புது டெல்லி தேசிய புத்தாக்க நிறுவனம் அகமதாபாத் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்-திய, புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் என்ற மாநில அளவிலான போட்டிகள், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்-லுாரியில் நடைபெற்றது.இதில், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியி-லிருந்து இரண்டு மாணவர்களின் கண்டுபிடிப்-புகள் மாநில அளவிற்கு தேர்வு செய்யப்பட்டது. வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரரின் வழிக்காட்டு-தலின்படி, பதினோராம் வகுப்பு ஜோகித் என்ற மாணவனின் கண்டுபிடிப்பான 'வாகனங்களில் விபத்துகளை தடுத்து பயணிகளின் உயிர் காக்கும் கருவி' மற்றும் பத்தாம் வகுப்பு சுர்ஜித் என்ற மாணவனின் கண்டுபிடிப்பான 'பள்ளி மாணவர்க-ளுக்கு பயனளிக்கக்கூடிய நவீன புத்தகப்பை' ஆகிய இரண்டும் தேர்வாகியுள்ளன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியரை, பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, தாளாளர் அசோக் சங்கர், செயலாளர் ஆனந்த், பள்ளி முதல்வர் காமேஷ்வர ராவ் மற்றும் துணை முதல்வர்கள் பாராட்டினர்.