குளித்தலை: குளித்தலை அடுத்த, மாவத்துார் பஞ்., ரெட்டியப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஊர் பொதுமக்கள் சார்பாக, 22ம் ஆண்டு மாநில அளவிலான தொடர் கபடி போட்டி நடந்தது. ரெட்டியபட்டி பகத்சிங் விளையாட்டு மைதானத்தில், மூன்று நாள் நடந்த கபடி போட்டிக்கு சி.பி.ஐ., (எம்) நிர்வாகி மற்றும் மாவத்துார் பஞ்., துணை தலைவர் பிரபாகுமார், நிர்வாகி துரைக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினரும், யூனியன் கவுன்சிலருமான ராமமூர்த்தி, மாவத்துார் பஞ்., தலைவர் கீதா முன்னிலை வகித்தனர்.கரூர், திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்துார், தஞ்சாவூர், ஈரோடு, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து, 56 அணிகள் பங்கேற்றன.மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜ், டி.ஒய்.எப்.ஐ., முன்னாள் மாநில செயலாளர் பாலா, சி.பி.ஐ., எம் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, சி.பி.எம்., மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற நான்கு அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஐந்து அணிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.