உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

கரூர்: பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவினருக்கு விடுதிகள் செயல்படுகின்றன. அதில், பள்ளி விடுதிகள், 10, கல்லுாரி விடுதிகள், 6 செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில், 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, கல்லுாரி விடுதியில், டிகிரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர், மாணவியர் சேரலாம்.இருப்பிடத்திலிருந்து, பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம், 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். இந்த துார விதி மாணவியருக்கு பொருந்தாது. சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பள்ளி விடுதி விண்ணப்பம், ஜூன், 14க்குள்ளும் கல்லுாரி விடுதி விண்ணப்பம், ஜூலை, 15க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ