உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.1.84 கோடி மதிப்பில் கோவில் திருப்பணி தொடக்கம்

ரூ.1.84 கோடி மதிப்பில் கோவில் திருப்பணி தொடக்கம்

குளித்தலை, மேட்டுமருதுார், ஆரா அமுதீஸ்வரர் சிவன் கோவி லில், நேற்று ரூ.1.84 கோடி மதிப்பில் திருப்பணி தொடங்குவதற்கான விழா துவங்கியது.குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டு மருதுார் கிராமத்தில், பழமை வாய்ந்த உடைய நாதர் என்ற ஆரா அமுதீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைப்பு செய்து புதுப்பிக்கப்பட வேண்டும் என பக்தர்கள், கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், கோவிலை புனரமைப்பு செய்ய தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இக்கோவிலில், 1.84 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திட்டப்பணியை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மண்டல ஹிந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ரத்தினவேலு பாண்டி, கோவில் செயல் அலுவலர்கள் சித்ரா, தீபா மற்றும் பொது மக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி