உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்றில் மணல் திருடியவர் கைது

ஆற்றில் மணல் திருடியவர் கைது

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, கூடுதுறை காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார், கூடுதுறை பகுதியில், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற டூவீலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், கூடுதுறையை சேர்ந்த சுப்பிரமணி, 55, சட்டவிரோத மணல் மூட்டைகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து மணல் திருட்டிற்கு பயன்படுத்திய டூவீலரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை