உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லைட் ஹவுஸ் கார்னரில் வாகன நிறுத்தத்தால் டிராபிக்

லைட் ஹவுஸ் கார்னரில் வாகன நிறுத்தத்தால் டிராபிக்

கரூர்: கரூர், லைட் ஹவுஸ் கார்னரில் வாகனங்களை நிறுத்தி வைப்-பதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், பைபாஸ் சாலை மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா வழியாக சென்று வருகிறது. இந்த ரவுண்டானா வளைவு பகுதியில் அதிகளவு வர்த்தக நிறுவ-னங்கள் உள்ளன. அருகிலேயே பழைய அமராவதி பாலத்தில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். இங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வருபவர்கள் பஸ்கள் பய-ணிகளை ஏற்றி செல்லும் பகுதியை ஒட்டிய பகுதியில் டூவீலர்-களை நிறுத்தி வைப்பதால், மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி வாகன விபத்துகளும் நடக்கிறது. எனவே, டூவீலர்களை நிறுத்த கட்-டுப்பாடு விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை