உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் இடமாற்றம்

கரூர்: லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், திரு ச்சி போலீஸ் சரகத்தில், 77 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், கரூர் மாவட்டத்தில் இருந்து, எட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதில், வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், திருச்சி மாவட்டம் லால்குடிக்கும், அரவக்குறிச்சி நாகராஜன், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர்-1 க்கும், கரூர் குற்றப்பிரிவு பத்மா, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மகளிர் ஸ்டேஷனுக் கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதேபோல், குளித்தலை மகளிர் இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மகளிர் ஸ்டேஷனுக்கும், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் ரூபி, திருச்சி மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும் இடமாற்றம் செய்யப்ப ட்டனர்.மேலும், குளித்தலை போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் போக்குவரத்து பிரிவுக்கும், கரூர் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி, திருச்சி மாவட்டம், ஜீயபுரம் போக்குவரத்து பிரிவுக்கும், பசுபதிபாளையம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், திருச்சி மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.* புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் மகளிர் இன்ஸ்பெக்டர் கவுரி, கரூர் ரூரல் மகளிர் ஸ்டேஷனுக்கும், திருச்சி மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, அரவக்குறிச்சிக்கும், புதுக்கோட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, கரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.திருச்சி காத்திருப்போர் பட்டியலில் இருந்த கார்த்திக் பிரியா, கரூர் சைபர் கிரைக்கும், முருகவேல், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், ரமேஷ் தோகமலைக்கும், கருணாகரன், வெங்கமேட்டுக்கும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை