உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரும் 5ல் உரிமை கோரப்படாத வைப்பு தொகை மீட்பு முகாம்

வரும் 5ல் உரிமை கோரப்படாத வைப்பு தொகை மீட்பு முகாம்

கரூர் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், வைப்பு தொகையை மீட்க உதவும் சிறப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.இது குறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நாளை மறுநாள் (5ம் தேதி) மாலை 4:00 மணிக்கு வங்கி, காப்பீடு நிறுவனங்கள் சார்பில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், இந்திய நிதி அமைச்சக வழிகாட்டுதலின் படி அனைத்து வங்கி, காப்பீடு மற்றும் இதர துறை சார்ந்த அலுவலகங்களில், நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்பு தொகை, காப்பீட்டு தொகை, பங்குகள் மற்றும் பிற நிதி சொத்துக்கள், உரிமையாளர்கள் அல்லது அவர்களது சட்ட வாரிசுகளுக்கு உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களை மீட்க உதவி செய்யப்படும்.வங்கியில் தொடர்ந்து, 10 ஆண்டுக்கு மேல் செயல்படாத கணக்குகளில் மற்றும் பணம் கோரப்படாத வைப்புத்தொகை ஆர்.பி.ஐ., பண்டுக்கு மாற்றப்படுகிறது. இது குறித்து, வங்கியின் இணையதளத்தில் அல்லது https://udgam.rbi.org.inதெரிந்து கொள்ளலாம். உரிமையாளர் அல்லது உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகளோ, எந்த நேரத்திலும் அதை கோரி பெறலாம். முகாமில் வங்கித்துறை, காப்பீட்டு துறை, நிதித்துறை, மற் றும் இதரதுறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது உரிய அடையாள ஆவனங்கள் மற்றும் சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று தேவையான ஆலோசனைகளை பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை