உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாலாந்துார் கிராமம் பெயர் பலகை திறப்பு

வாலாந்துார் கிராமம் பெயர் பலகை திறப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., வாலாந்துார் கிரா-மத்தில், 450க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குளித்த-லை-மணப்பாறை நெடுஞ்சாலையில் வாலாந்துார் பிரிவு சாலையில், நேற்று கிராம மக்கள் சார்பில், வாலாந்துார் கிராமம் என்ற பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. குளித்தலை ஒன்றிய தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளர் பழனிசாமி தலைமை வகித்தார். சுந்தர்ராஜ், நடேசன், பேராசிரியர் விஜய், ஆசிரியர் கலி-யமூர்த்தி, ராமநாதன், முன்னாள் கவுன்சிலர் காமராஜ், கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர். கிராம மக்கள் பெயர் பலகையை திறந்து வைத்தனர்.வாலாந்துார் பிரிவு சாலையில், இரவு நேரங்களில் பல்வேறு பகு-தியில் இருந்து வரும் குடிமகன்கள் தார்ச்சாலையில் வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்துகின்றனர். இப்பகுதியில் குற்றங்கள் நிகழாதவாறு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை