உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.12 கோடிக்கு காய்கறி விற்பனை

கரூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.12 கோடிக்கு காய்கறி விற்பனை

கரூர், கரூர் உழவர் சந்தையில் கடந்த மாதம், ரூ.2.12 கோடிக்கு காய்கறிகள் விற்பனை நடந்துள்ளது.கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகில் உழவர் சந்தை உள்ளது. தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, கரூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டு -வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தை வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வருகின்றனர்.நேற்றைய நிலவரப்படி காய்கறி விலை கிலோவிற்கு தக்காளி, 50 ரூபாய், கத்தரிக்காய், 40, பட்டை அவரை, 100, வெண்டைக்காய், 50, புடலங்காய், 40, பாகற்காய், 40, பரங்கிக்காய், 20, பூசணி, 35, பச்சை மிளகாய், 65, கருணை கிழங்கு, 60, சேனை கிழங்கு, 50, தேங்காய், 70, சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 35, உருளை கிழங்கு, 60, கேரட், 75, பீன்ஸ், பீட்ரூட் தலா, 70, கொய்யா, 60 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த நவம்பரில் கோவில் கும்பாபிஷேகம், முகூர்த்த நாட்கள் இருந்ததால், காய்கறி விற்பனை கூடுதலாக நடந்துள்ளது. கடந்த நவ.,1 முதல், 30ம் தேதி வரை உழவர் சந்தைக்கு, 2,950 விவசாயிகள், 4 லட்சத்து, 38 ஆயிரத்து, 317 கிலோ காய்கறிகள், பழங்களை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம், 2 கோடியே, 12 லட்சத்து, 3,885 ரூபாய்-க்கு காய்கறி விற்பனையானது. 73 ஆயிரத்து, 956 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை