உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேப்பங்குடி தார்ச்சாலை சேதம்; சரி செய்ய மக்கள் கோரிக்கை

வேப்பங்குடி தார்ச்சாலை சேதம்; சரி செய்ய மக்கள் கோரிக்கை

குளித்தலை : வேப்பங்குடி, அரசு சுகாதார நிலைத்திற்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து கிடப்பதால், சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளித்தலை அடுத்த, வேப்பங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இந்த நிலையத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாகவும், கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து பொதுமக்களும், கர்ப்பிணிகளும் வந்து, உடல் பரிசோதனை செய்கின்றனர். இச்சாலை மிகவும் மோசமானதாக காணப்படுகிறது.சேதமான சாலையில் அரசு பஸ்கள், தனியார் பள்ளி, கல்லுாரி வேன்கள் செல்கின்றன. மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது, கற்கள் பெயர்ந்து கிடப்பதால் கர்ப்பிணிகள் பாதிக்கபடுகின்றனர். இந்த சாலையில் இரு தரை பாலங்கள் அமைந்துள்ளது. மழை காலங்களில் தரை பாலத்தில் காற்றாற்று வெள்ளம் செல்லும்,எனவே, சேதமடைந்த தார்ச்லையை சரி செய்து, புதிய சாலை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை