உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 4 தொகுதிகளின் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேவை மையம் தொடக்கம்

4 தொகுதிகளின் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேவை மையம் தொடக்கம்

கரூர், மாவட்டத்தில், 4 தொகுதிகளின் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேவை மையம் செயல்பட தொடங்கியது.கரூர் மாவட்டத்தில் உள்ள, 4 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன. இதில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால், கணக்கெடுப்பு படிவம் கடந்த, 4 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில், பூர்த்தி செய்யப்பட்ட படிவம் திரும்ப பெறும் பணியும் நடக்கிறது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த படிவங்களை பூர்த்தி செய்வதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், பலர் படிவங்களை தவறாக பூர்த்தி செய்து வருகின்றனர். எனவே, வாக்காளர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதன்படி, கரூர் மாவட்டத்தில், 1,055 ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர் சேவை மையங்கள் செயல்பட, நேற்று தொடங்கிய நிலையில், இன்றும் நடக்கிறது. பெரும்பாலான மையங்களில் மக்கள் கூட்டம் பரவலாக காணப்பட்டது. இதில், கடந்த, 2002 மற்றும், 2005ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் விபரங்களை கண்டறியவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான உதவிகளை வழங்கினர். இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில், வாக்காளர் சேவை மையங்களை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை