| ADDED : டிச 10, 2025 11:14 AM
கரூர்: கரூர் அருகே, செட்டிபாளையம் அணைக்கு மழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து மழை காரணமாக வினாடிக்கு, 25 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் கடந்த, 27 முதல் பெய்து வரும் மழை காரணமாக, செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்-துள்ளது. இதனால் வரும் தண்ணீரை, அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,105 கன அடியாக தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 1,085 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்-காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்-டுள்ளது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.71 அடியாக இருந்தது. அணையில் இருந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.