உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 1,358 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நில-வரப்படி வினாடிக்கு, 2,105 கன அடியாக, தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதியில் சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 1,085 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்-மட்டம், 25.71 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்-காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி